Articles
திண்டுக்கல் மாவட்டப் பறவைகள் எனது சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலை எழுந்தவுடன் பறவைகள் பார்ப்பதை தொடர் வழக்கமாக வைத்திருக்கிறேன். உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சியின் போதும் அடிக்கடி குடும்பத்தோடு கோயிலுக்குச் செல்லும் போதும், அவ்வப்போது நண்பர்களோடு செல்லும் உற்சாகப் பயணத்தின் போதும் கூட, என் கண்கள் ஒரு பறவையைக் காணவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். என் காதுகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. பறவைகளின் குரலொலிகள் கேட்டு அது இன்னின்ன பறவைகள் என்று மூளைக்கு
